வர்த்தகம்

சிப்லா லாபம் ரூ.434 கோடி

DIN

மருந்து தயாரிப்பு துறையைச் சேர்ந்த சிப்லா நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.434.95 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்தநிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2017-18 நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.4,195.74 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் மொத்த வருவாய் ரூ.3,778.25 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.369.64 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.434.95 கோடியாக இருந்தது. புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டு, அரையாண்டு காலத்தில் செயல்பாடுகளின் மூலம் ஈட்டிய வருவாயை கடந்தாண்டுடன் ஒப்பிட இயலாது என்று சிப்லா தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT