வர்த்தகம்

அசோக் லேலண்ட் லாபம் 14 சதவீதம் அதிகரிப்பு

DIN

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகரித்தது. 
இரண்டாவது காலாண்டுக்கான முடிவுகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோபால் மகாதேவன் வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அசோக் லேலண்ட் நிறுவனம் நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிகர லாபமாக ரூ.334.26 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ. 294.41 கோடியாக இருந்தது.
மொத்த வருவாய் ரூ.4,622 கோடியிலிருந்து 31 சதவீதம் அதிகரித்து ரூ.6,046 கோடியாக உயர்ந்துள்ளது. கனரக, இலகுரக வாகன உற்பத்தி 33,440 லிருந்து அதிகரித்து 40,989- ஆக இருந்தது. ஒட்டு மொத்தமாக வாகன உற்பத்தி 23 சதவீதமும், ஏற்றுமதி 39 சதவீதமும் அதிகரித்துள்ளது. 
நிகழ் நிதியாண்டின் (2017-2018) முதல் அரையாண்டில் மொத்த வருவாய் ரூ.10,284 கோடியாகவும், நிகர லாபம் ரூ.445 கோடியாகவும் உள்ளது. 
பி.எஸ்.-4 வகை வாகனங்களுக்கான நிறுவனத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஐஇஜிஆர்' தொழில்நுட்பத்துக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. 
இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நியூஸிலாந்தில் இருந்து குறிப்பிடத்தக்க ஆர்டர்கள் கிடைத்துள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி, ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT