வர்த்தகம்

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையில் 'சாம்சங் பே' செயலி முன்னிலை

DIN

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை சேவையை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'சாம்சங் பே' செயலியை நாடு முழுவதும் 25 லட்சம் பேர் பயன்படுத்துவதாக அந்த நிறுவனத்தின் தலைமைப் பொதுமேலாளர் ஆதித்ய பப்பார் கூறினார். 
இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சாம்சங் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க சாம்சங் பே என்ற செயலியை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தோம். அதனை தற்போது 25 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். செப்டம்பர் மாத நிலவரப்படி சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன் விற்பனையில் 47 சதவீதப் பங்கினை சந்தையில் கொண்டுள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் 68 சதவீத பங்களிப்பை வைத்துள்ளது. வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் சாம்சங் நிறுவனம் முதலீட்டை இரு மடங்கு அதிகரித்துள்ளது. 
நொய்டாவில் உள்ள தொழில் வளாகத்தில் மட்டும் ரூ.4,915 கோடியை முதலீடு செய்துள்ளோம். ஸ்மார்ட் ஃபோன் விற்பனையில் தமிழகம் முதல் 5 இடங்களில் உள்ளது. சாம்சங் ஜே வகை ஸ்மார்ட் ஃபோன்கள் அதிக அளவு விற்பனையாகி வருகிறது. சாம்சங் இந்தியா நிறுவனம் 1 லட்சத்து 50 ஆயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது. அதில் 1,900 கிளைகள் நிறுவனத்தின் சொந்தக் கிளைகள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT