வர்த்தகம்

ஐடியா செல்லுலார் இழப்பு ரூ.1,106 கோடி

DIN

தொலைத்தொடர்புத் துறையில் நிலவி வரும் கடும் போட்டியால் ஐடியா செல்லுலார் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.1,106.8 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.7,465.5 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.9,300.23 கோடியுடன் ஒப்பிடும்போது இது 19.72 சதவீதம் சரிவாகும்.
இதையடுத்து, கடந்த நிதி ஆண்டில் ரூ.91.50 கோடி லாபம் ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1,106.8 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது என ஐடியா செல்லுலார் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT