வர்த்தகம்

வோடஃபோன் லாபம் 39% வீழ்ச்சி

DIN

தொலைத் தொடர்புத் துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் வோடஃபோன் வரிக்கு முந்தைய லாபம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 39 சதவீதம் சரிவைக் கண்டது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வோடஃபோன் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.22,579 கோடி வருவாய் ஈட்டியது. ரிலையன்ஸ் ஜியோ வரவையடுத்து, சந்தையில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், சேவை வாயிலான வருவாய் 15.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.19,002 கோடியானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செயல்பாட்டு லாபம் 39.2 சதவீதம் சரிந்து ரூ.6,704 கோடியானது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.6,704 கோடியிலிருந்து 39.2 சதவீதம் சரிந்து ரூ.4,075 கோடியானது. நடப்பு நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 0.6 சதவீதம் அதிகரித்து 23.1 சதவீதமாகவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.3 சதவீதம் உயர்ந்து 20.7 கோடியாகவும் உள்ளது என வோடஃபோன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT