வர்த்தகம்

தொடர் விறுவிறுப்பில் பங்குச் சந்தை

DIN

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 7ஆவது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
உள்நாட்டு நிதி நிறுவனங்கள் தங்கு தடையின்றி பங்குகளில் முதலீட்டை தொடர்ந்து அதிகரித்தன. மேலும், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பும் சந்தையின் தொடர் ஏற்றத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது என இத்துறையைச் சேர்ந்த பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டதையடுத்து, அவற்றின் விலை முறையே 2.79 சதவீதம் மற்றும் 0.85 சதவீதம் அதிகரித்தது. அதேசமயம், உலோகத் துறை நிறுவனப் பங்குகளின் விலை 0.6 சதவீதம் சரிவைக் கண்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், இன்ஃபோசிஸ் பங்கின் விலை 1.87 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.07 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 1.05 சதவீதமும் அதிகரித்தன. அதேசமயம், பாரத ஸ்டேட் வங்கி, அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ் நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 91 புள்ளிகள் அதிகரித்து மூன்று வாரங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாக 33,679 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 10,389 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT