வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு

DIN

தொடர்ந்து 8 நாள்களாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது திடீர் சரிவைக் கண்டது.
நவம்பர் மாதத்துக்கான பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு நெருங்கி வருவதையடுத்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இரண்டாம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெளியாகவிருப்பதும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. 
ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க பங்குச் சந்தைகளைப் பொருத்தவரையில் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. இதற்கு, அமெரிக்க வரி சீர்திருத்தத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில், தொலைத் தொடர்புத் துறை பங்குகளின் விலை அதிகபட்சமாக 1.30 சதவீத சரிவைக் கண்டது.
அதனைத் தொடர்ந்து நுகர்வோர் சாதனங்கள், தொழில்நுட்பம், பொதுத் துறை நிறுவனப் பங்குகளுக்கும் சந்தையில் தேவை குறைந்தே காணப்பட்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், என்டிபிசி பங்கின் விலை 1.88 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதனைத் தொடர்ந்து, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஸன் பார்மா, ஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின. 
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சீன மேம்பாட்டு வங்கி திவால் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து அதன் பங்கின் விலை 3.37 சதவீதம் சரிந்தது.
இந்த கடினமான சூழ்நிலைக்கிடையிலும், மாருதி சுஸுகி, ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா, ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகளின் விலை உயர்ந்ததால் சந்தையின் சரிவு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிந்து 33,618 புள்ளிகளாக நிலைத்தது. 
மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் கடன் பெறும் தகுதி மதிப்பீட்டை உயர்த்தியது மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது ஆகிய சாதகமான நிலவரங்களால், கடந்த எட்டு நாட்களில் சென்செக்ஸ் 964 புள்ளிகள் அதிகரித்திருந்த நிலையில் சந்தையில் திடீரென இந்த சரிவு ஏற்பட்டது. 
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 29 புள்ளிகள் குறைந்து 10,370 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT