வர்த்தகம்

புதிய தொழில்நுட்பத்தில் ஸ்டார் சிட்டி ப்ளஸ் டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்

DIN

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மோட்டார் சைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது. 
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்) அனிருத்தா ஹல்தார் கூறியதாவது:
விழாக் காலத்தை முன்னிட்டு ஸ்டார் சிட்டி ப்ளஸ் மோட்டார் சைக்கிளை புதிய தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்துள்ளோம். அதிக சக்தி வாய்ந்த 110 சிசி எக்கோதிரஸ்ட் என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.4 குதிரைத் திறன் கொண்டது. 
மேலும், இரட்டை வண்ண கலவை, முப்பரிமாண டிவிஸ் குரோம் லேபிள் உள்ளிட்ட வசீகரமான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 
ஆற்றல், நேர்த்தி, மைலேஜ் (லிட்டருக்கு 86 கி.மீ.) ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்ற இப்புதிய டிவிஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மோட்டார் சைக்கிளின் விலை யாரும் போட்டியிட முடியாத வகையில் ரூ.50, 800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் கருப்பு-சிவப்பு, கருப்பு-நீலம், சிவப்பு-கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT