வர்த்தகம்

மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை 22.5% அதிகரிப்பு

DIN

ஜெர்மனைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ், இந்தியாவில் தனது வாகன விற்பனை 22.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2016-17-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் எங்களது விற்பனை 13,259 வாகனங்களாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 16,236 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது, 22.5 சதவீத வளர்ச்சியாகும்.
மேலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை எங்களது 4,556 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் விற்பனையான 3,650 வாகனங்களோடு ஒப்பிடுகையில், இது 24.8 சதவீத வளர்ச்சியாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT