வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.146 கோடியாக அதிகரிப்பு

DIN


டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.146.6 கோடி லாபம் ஈட்டியது. அனைத்து ரக வாகன விற்பனையும் மீண்டும் சூடுபிடித்ததே இதற்கு முக்கிய காரணம்.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டிவிஎஸ் மோட்டார் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.4,171 கோடியை ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.3,456.6 கோடியாக காணப்பட்டது. 
வரிக்கு பிந்தையல லாபம் ரூ.129.5 கோடியிலிருந்து 13.2 சதவீதம் அதிகரித்து ரூ.146.6 கோடியானது.
இக்காலாண்டில் மொத்த இருசக்கர வாகன விற்பனை 7.85 லட்சத்திலிருந்து 14 சதவீதம் உயர்ந்து 8.93 லட்சமானது. குறிப்பாக, மோட்டார் சைக்கிள் விற்பனை 17 சதவீதம் வளர்ச்சி கண்டு 3.87 லட்சமாகவும், ஸ்கூட்டர்கள் விற்பனை 12 சதவீதம் அதிகரித்து 2.88 லட்சமாகவும் இருந்தது. மேலும், ஏற்றுமதி 52 சதவீதம் உயர்ந்து 1.90 லட்சத்தை எட்டியது என டிவிஎஸ் மோட்டார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT