வர்த்தகம்

பருத்தி உற்பத்தி 365 லட்சம் பொதிகளாகவே இருக்கும்'

DIN


நாட்டின் பருத்தி உற்பத்தி நடப்பு பயிர் பருவத்தில் 365 லட்சம் பொதிகளாகவே இருக்கும் என்று இந்திய பருத்தி கழகம் (சிஏஐ) மீண்டும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கழகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மதிப்பிடப்பட்டதைப் போலவே நடப்பு பயிர் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) பருத்தி உற்பத்தியானது 365 பொதிகளாகவே இருக்கும். ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இதன் உற்பத்தி சரிவடையும் என தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி இம்மாநிலங்களில் பருத்தி உற்பத்தி முறையே 2 லட்சம் மற்றும் 50,000 பொதிகள் குறையும். கடந்தாண்டு அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜூலை வரையிலான பத்து மாதங்களில் உள்நாட்டில் பருத்தி பயன்பாடு 270 லட்சம் பொதிகள் எனவும், அதன் ஏற்றுமதி 67 லட்சம் பொதிகள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜூலை இறுதி நிலவரப்படி பருத்தி கையிருப்பு 63.45 லட்சம் பொதிகளாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சிஏஐ தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT