வர்த்தகம்

மொபைல் சேவை வாடிக்கையாளர் எண்ணிக்கை 114.65 கோடியாக உயர்வு

DIN


செல்லிடப் பேசிகளுக்கான தொலைத் தொடர்பு சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதம் 114.65 கோடியாக உயர்ந்தது.
இதுகுறித்து டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதம் மட்டும் கூடுதலாக 1.55 கோடி பேர் செல்லிடப் பேசிகளுக்கான தொலைத் தொடர்பு சேவையைப் பெற்றுள்ளனர். 
இதன் காரணமாக, அத்தகைய சேவை பெறுபவர்களின் எண்ணிக்கை 114.65 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தச் சேவை வழங்கும் நிறுவனங்களில், ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதம் மட்டும் கூடுதலாக 97 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து முதலிடத்தை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் 63 லட்சம் புதிய வாடிக்கையாளர்களுடன் ஐடியா செல்லுலார் உள்ளது. 
2.76 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகப் பெற்றுள்ள வோடாஃபோன் நிறுவனம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது என டிராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT