வர்த்தகம்

லக்னெள - இராக் நேரடி விமான சேவை: ஏர் இந்தியா பரிசீலனை

DIN


லக்னெளவிலிருந்து ஈராக்குக்கு நேரடி விமானப் போக்குரவத்து சேவையைத் தொடங்க ஏர் இந்தியா பரிசீலித்து வருகிறது.
இதுறித்து நிறுவன வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவிலிருந்து, இராக்கின் நஜஃப் நகருக்கு விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அந்த விமானம், வழியில் தில்லியில் நின்று செல்லவும் திட்டமிடப்படுகிறது.
இராக்கின் நஜஃப் நகரம், ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. லக்னெளவிலும் கணிசமான எண்ணிக்கையில் ஷியா பிரிவினர் இருப்பதால், அவர்கள் அந்த நகருக்குச் செல்வதற்கு வசதியாக இரு நகரங்களுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, இது தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT