வர்த்தகம்

"ரூ.2.33 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன் வசூல்'

DIN

பொதுத் துறை வங்கிகள் ரூ.2.33 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை வசூல் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்ததாவது:
கடந்த 2014-15 முதல் 2017-18 வரையிலான நான்கு ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகள் ரூ.2,33,339 கோடி மதிப்பிலான வாரக் கடன்களை வசூல் செய்துள்ளன.
நடப்பாண்டு செப்டம்பர் 30  நிலவரப்படி, நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன் ரூ.2.02 லட்சம் கோடியாக இருந்தது.
மேலும், இதைத்தவிர எஞ்ச்சியுள்ள 20 பொதுத் துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வாராக் கடன் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.80,993 கோடியாகவும், ஐடிபிஐ வங்கியின் வாராக் கடன் ரூ.50,690 கோடியாகவும், பேங்க் ஆஃப் இந்தியா கடன் ரூ.50,338 கோடியாகவும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக் கடன் ரூ. 48,575 கோடியாகவும் உள்ளன.
இதைத்தவிர, பேங்க் ஆஃப் பரோடா வாராக் கடன் ரூ.46,454 கோடியாகவும், கனரா வங்கியின் வாராக் கடன் ரூ.41,907 கோடியாகவும், சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியா கடன் ரூ.37,411 கோடியாகவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக் கடன் ரூ.35,607 கோடியாகவும், யூகோ வங்கியின் வாராக் கடன் ரூ.28,822 கோடியாகவும் உள்ளன.
கடந்த 2008 மார்ச் இறுதியில் ரூ.16.98 லட்சம் கோடியாக இருந்த பொதுத் துறை வங்கிகள் வழங்கிய ஒட்டு மொத்த கடன் 2014 மார்ச் இறுதி நிலவரப்படி ரூ.45.91 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என சுக்லா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT