வர்த்தகம்

ரூ.11 லட்சத்தில் புதிய பைக்: டிரையம்ப் அறிமுகம்

DIN

பிரிட்டனைச் சேர்ந்த உயர்வகை மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான டிரையம்ப் நிறுவனம், இந்தியாவில் தனது புகழ்பெற்ற 'போனெவில் ஸ்பீட்மாஸ்டர்' ரக மோட்டார் சைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
நாடு முழுவதும் இந்த பைக்கின் காட்சியக விலை ரூ.11.11 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இரட்டை 'பிரெம்போ' டிஸ்க் பிரேக்குகள், உயர்வகை அம்சங்கள் கொண்ட சஸ்பென்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த பைக்கின் என்ஜின், 1,200 சிசி திறன் கொண்டதாகும்.
12 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட இந்த பைக்குக்கு தொடக்க கால பராமரிப்பு சேவைகளை 16,000 கி.மீ. ஓட்டத்துக்கு ஒருமுறை மேற்கொண்டால் போதும் என்று டிரையம்ப் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT