வர்த்தகம்

'இந்திய பொருளாதாரம் 7.4 சதவீத வளர்ச்சி காணும்'

DIN

நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.4 சதவீத வளர்ச்சி காணும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் சர்வதேச நிதியம் திங்கள்கிழமை வெளியிட்ட உலக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 
2016-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு-சேவை வரி அமலால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சுணக்கம் கண்டது. இதையடுத்து, கடந்த 2017-இல் வளர்ச்சி விகிம் 6.7 சதவீதமாக இருந்தது. தற்போது சூழல் மேம்பட்டுள்ள நிலையில், நடப்பு 2018-இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாகவும், 2019-இல் 7.8 சதவீதமாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6.8 சதவீதமாக மட்டுமே இருக்கும் என சர்வதேச நிதியம் அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT