வர்த்தகம்

எல் & டி டெக். லாபம் ரூ.126 கோடியாக அதிகரிப்பு

DIN

எல் & டி டெக்னாலஜீ சர்வீசஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.126.3 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின்தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கேஷப் பாண்டா தெரிவித்ததாவது:
நிறுவனத்தின் அனைத்து பிரிவு வர்த்தகமும் சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் என்ஜியனியரிங் மூலமான பங்களிப்பு மொத்த வருவாயில் 20 சதவீதம் அளவுக்கு நிலையான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின்வருவாய் ரூ.969.1 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.810.4 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 19.6 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.108.7 கோடியிலிருந்து 16.1 சதவீதம் அதிகரித்து ரூ.126.3 கோடியானது. மூன்றாவது காலண்டில் நிகர அளவில் 409 பணியாளர்கள் சேர்ந்ததையடுத்து மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 11,941ஆக உள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT