வர்த்தகம்

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 3.7% அதிகரிப்பு

DIN

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் முதல் காலாண்டு லாபம் 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2018-19 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இன்ஃபோசிஸின் வருவாய் ரூ.19,128 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.17,078 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.3,483 கோடியிலிருந்து 3.7 சதவீதம் அதிகரித்து ரூ.3,612 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் ஒரு பங்கு போனஸாக வழங்கப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிதி நிலை முடிவுகள் வெளியாகி இரண்டு நாள்களே ஆன நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனமும் போட்டி போட்டு தனது நிதி நிலை முடிவுகளை விரைந்து வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

SCROLL FOR NEXT