வர்த்தகம்

ஜேஎல்ஆர் சர்வதேச விற்பனை 6.1 சதவீதம் உயர்வு

DIN

டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) சர்வதேச கார் விற்பனை சென்ற மே மாதத்தில் 6.1 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து ஜேஎல்ஆர் தலைமை வர்த்தக அதிகாரி ஃபெலிக்ஸ் பிராடிகம் கூறியதாவது:
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் லேண்ட் ரோவர் வாகனங்களுக்கான தேவை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, விருதை தட்டிச் சென்ற ரேஞ்ச் ரோவர் வேலர் ரக வாகனங்கள் விற்பனையில் முக்கிய பங்களிப்பைக் கொண்டிருந்தன.
கடந்த மே மாதத்தில் ஜாகுவார் பிராண்ட் வாகனங்கள் விற்பனை 14,507-ஆக இருந்தது. கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 6.6 சதவீதம் அதிகமாகும். லேண்ட் ரோவர் பிராண்ட் கார் விற்பனை 6 சதவீதம் அதிகரித்து 33,774-ஆக காணப்பட்டது. புதிய மாடல்களின் அறிமுகத்தையடுத்து, சென்ற மே மாதத்தில் ஜேஎல்ஆர் சர்வதேச விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.1 சதவீதம் அதிகரித்து 48,281-ஆனது.
ஜாகுவார் ஐ-பேஸ் வாகனத்துக்கான தேவை சந்தையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜாகுவார் இ-பேஸ் விற்பனையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இந்த சொகுசு வாகனத்தை சீனாவில் அதிகளவில் சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT