வர்த்தகம்

சிர்கான் டெக் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி

DIN

சிர்கான் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டு திட்டத்துக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.
சிர்கான் டெக்னாலஜீஸ் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள கடந்த செப்டம்பர் மாதம் விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த செபி தற்போது அதற்கான அனுமதியை அளித்துள்ளது.
இப்பங்கு வெளியீட்டின் மூலம் 59 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் தொகையை விரிவாக்க திட்டங்களுக்கும், கடன்களை திருப்பி செலுத்துவதற்கும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளஅந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சிர்கான் டெக்னாலஜீஸ் பங்கு வெளியீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதன் மூலம், நடப்பாண்டில் இதுவரையில் மொத்தம் 70 நிறுவனங்களுக்கு புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள செபி அனுமதி வழங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT