வர்த்தகம்

டாஃபே: சிறிய வகை டிராக்டர்கள் தயாரிக்க ஜப்பான் நிறுவனத்துடன் கூட்டு

DIN


டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்கியூப்மெண்ட் (டாஃபே) நிறுவனம், சிறிய வகை டிராக்டர்களை தயாரிக்க ஜப்பானின் ஐஎஸ்இகேஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுகுறித்து டாஃபே நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான மல்லிகா ஸ்ரீநிவாஸன் கூறியதாவது:
சிறிய வகை டிராக்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் வகையில் ஜப்பானைச் சேர்ந்த ஐஎஸ்இகேஐ நிறுவனத்துடன் டாஃபோ உடன்பாடு செய்து கொண்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச அளவில் சிறிய வகை டிராக்டர் பிரிவில் உள்ள ஜப்பான் நிறுவனத்தின் அனுபவம், தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியாவில் 35-54ஹெச்பி சிறிய வகை டிராக்டர்களுக்கு அதிக தேவை காணப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பான் நிறுவனத்தின் பிரீமியம் இலகு ரக டிராக்டர்களை டாஃபே அதன் மதுரை ஆலையில் தயாரிக்கும்.
பன்முக பயன்பாடுகளைக் கொண்ட இந்த சிறிய வகை டிராக்டர்கள் இந்திய சந்தைகளில் 2020-ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT