வர்த்தகம்

ஹீரோ மோட்டோகார்ப் லாபம் ரூ.976 கோடி 

DIN


இருசக்கர வாகன தயாரிப்பில் உள்நாட்டில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ஹீரோ மோட்டோகார்ப் இரண்டாம் காலாண்டில் ரூ.976.28 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.1,010.49 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 3.38 சதவீதம் குறைவாகும்.
நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.8,371.74 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.9,090.94 கோடியாக காணப்பட்டது. 
மொத்த செலவினம் ரூ.7,053.63 கோடியிலிருந்து வெகுவாக அதிகரித்து ரூ.7,866.15 கோடியாக காணப்பட்டது. இதன் காரணமாகவே லாபம் சரிந்துள்ளது. 
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இருசக்கர வாகன விற்பனை 20,22,805 என்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரித்து 21,34,051-ஆக இருந்தது என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT