வர்த்தகம்

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் 9% உயர்வு

DIN


பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் செப்டம்பர் மாதத்தில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்(ஐஆர்டிஏஐ) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் ஈட்டிய பிரீமியம் வருவாய் ரூ.19,098.51 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் ஈட்டிய பிரீமியம் ரூ.17,514.64 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு மாதத்தில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஈட்டிய பிரீமியம் வருவாய் ரூ.2,450.28 கோடியாக இருந்தது. இதையடுத்து, ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் 10 சதவீதம் உயர்ந்து ரூ.1,552.05 கோடியாகவும், யுனைடெட் இந்தியா பிரீமியம் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ.1,305.12 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் பிரீமியம் 37 சதவீதம் உயர்ந்து ரூ.1,379.12 கோடியாகவும், ஐசிஐசிஐ லொம்பார்டு பிரீமியம் 8.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,318.48 கோடியாகவும் இருந்தன.
பஜாஜ் அலையன்ஸின் பிரீமியம் வருவாய் 40% சரிந்து ரூ.839.08 கோடியாக காணப்பட்டது. இதைத் தவிர, நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் பிரீமியம் 29.2% வீழ்ச்சியடைந்து ரூ.893.31 கோடியாக இருந்தது என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT