வர்த்தகம்

ஸ்மார்ட்போன் விற்பனை 5 சதவீதம் உயர்வு

DIN


விழாக் காலத்தையொட்டி ஸ்மார்ட்போன்கள் விற்பனை மூன்றாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 4.4 கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து கவுன்டர்பாயின்ட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
செப்டம்பர் காலாண்டில் மொத்த 8.8 கோடி செல்லிடப்பேசி உற்பத்தியில் பாதியளவு விற்பனை (4.4 கோடி) ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பாக உள்ளது. முந்தைய காலாண்டை காட்டிலும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை மூன்றாவது காலாண்டில் 24 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனையில் 27 சதவீத பங்களிப்புடன் ஜியோமி முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, 23 சதவீத பங்களிப்புடன் சாம்சங் இரண்டாவது இடத்திலும், 10 சதவீத பங்களிப்புடன் விவோ மூன்றாவது இடத்திலும், 9 சதவீத பங்களிப்புடன் மைக்ரோமேக்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளன. செப்டம்பர் காலாண்டில் 8 சதவீத பங்களிப்புடன் ஓப்போ நிறுவனம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT