வர்த்தகம்

கூகுள் பே செயலி மூலம் தங்கம் விற்பனை

DIN


கூகுள் பே நிறுவனம் அதன் செயலியில் தங்கம் விற்பனையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கூகுள் பே இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் அம்ரேஷ் கென்ஜி கூறியதாவது:
இந்திய கலாசார மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக தங்கம் விளங்குகிறது. எனவேதான், அதன் நுகர்வில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அக்ஷய திரிதியை, தீபாவளி பண்டிகையின்போது தங்கம் வாங்குவது என்பது  பெரும்பாலான இந்திய குடும்பங்களின் வழக்கம்.
கூகுள் பே இதனை உணர்ந்து தற்போது தங்கம் விற்பனையை செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், கூகுள் பே வாடிக்கையாளர்கள் 99.99 சதவீத 24 காரட் சுத்தமான தங்கத்தை இருந்த இடத்தில் இருந்தே வாங்க விற்க முடியும்.
தங்க விற்பனைக்காக கூகுள் பே நிறுவனம், எம்எம்டிசி- பிஏஎம்பி இந்தியா ஆகியவற்றுடன் பங்குதாரராக இணைந்துள்ளது என்றார் அவர். 
இதேபோன்ற தங்க விற்பனை சேவையை பேடிஎம், மொபிக்விக் மற்றும் போன்பீ நிறுவனங்கள் ஏற்கெனவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதிமீறல்: 30 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

பாமக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

SCROLL FOR NEXT