வர்த்தகம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிரச்னைகளை ஆய்வு செய்ய உத்தரவு

DIN


ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், அந்நிறுவனத்தின் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்யுமாறு உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் எரிபொருளுக்கான பணத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு  ஜெட் ஏர்வேஸ் செலுத்தவில்லை. அதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு வழங்கி வந்த எரிபொருளை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. அதனால் வடகிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்துக்கான விமானச் சேவையை அந்த நிறுவனம் ரத்து செய்தது. சர்வதேச விமானச்சேவையும் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் வியாழக்கிழமை வெறும் 14 விமானங்களே இயக்கப்பட்டுள்ளன. விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் விமான நிலையங்களில் அவதிப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு விமானப் போக்குவரத்து துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களுக்கு எவ்விதமான தொந்தரவும் ஏற்படாமல், பாதுகாப்பாக வேறு விமானங்களில் பயணிக்க ஏற்பாடு செய்யுமாறும் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் 9 விமானங்கள் மட்டும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டதாகவும், பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு சுமார் ரூ. 3500 கோடி வழங்க வேண்டிய சூழல் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கடந்த டிசம்பர் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் 124 விமானங்கள் இயக்கப்பட்டன. இப்போது 10-க்கும் குறைவான எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT