வர்த்தகம்

மாருதி சுஸுகி கார் விற்பனை 33 சதவீதம் குறைந்தது

DIN


நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் 33.5 சதவீதம் குறைந்து 1,09,264-ஆக இருந்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு இதேகாலகட்டத்தில் விற்பனை 1,64,369-ஆக காணப்பட்டது.
உள்நாட்டு விற்பனை 1,54,150 என்ற எண்ணிக்கையிலிருந்து 36.3 சதவீதம் சரிந்து 98,210-ஆனது.
குறிப்பாக, ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய ரக கார்களின் விற்பனை 37,710-லிருந்து 69.3 சதவீதம் வீழ்ச்சியடைந்து 11,577-ஆனது. ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர் மாடல்களின் விற்பனை 22.7 சதவீதம் குறைந்து 57,512-ஆக இருந்தது.
மேலும், ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 10,219 என்ற எண்ணிக்கையிலிருந்து 9.4 சதவீதம் குறைந்து 9,258-ஆக இருந்தது என மாருதி சுஸுகி இந்தியா தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT