வர்த்தகம்

கார்ப்பரேஷன் வங்கி லாபம் ரூ.103 கோடி 

DIN

பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.103 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.84.96 கோடியுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகமாகும்.
 அதேசமயம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் வங்கிக்கு ரூ.6,581.49 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது. 2018-19 முழு நிதியாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு ரூ.6,332.98 கோடியாக இருந்தது.
 நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.4,977.92 கோடியிலிருந்து ரூ.4,417.88 கோடியாக குறைந்துள்ளது.
 ஜூன் நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 17.44 சதவீதத்திலிருந்து 15.44 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 11.46 சதவீதத்திலிருந்து 5.69 சதவீதமாகவும் குறைந்துள்ளன.
 வாராக் கடன் இடர்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1,508 கோடியிலிருந்து ரூ.715.98 கோடியாக பாதியாக குறைந்தது என செபியிடம் கார்ப்பரேஷன் வங்கி தெரிவத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT