வர்த்தகம்

காப்பீட்டு பாலிசி விநியோகத்தில் இந்தியன் வங்கி-எஸ்பிஐ லைஃப் ஒப்பந்தம்

DIN

காப்பீட்டு பாலிசிகள் விநியோகிப்பது தொடர்பான வர்த்தகத்தில் இந்தியன் வங்கி, எஸ்பிஐ லைஃப் நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தனிநபர் மற்றும் குழுக் காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக  
இந்தியன் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர்-தலைமைச் செயல் அதிகாரி பத்மஜா சுந்துரு மற்றும் எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் நௌதியால் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதுமுள்ள 2851 இந்தியன் வங்கி கிளைகளில், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸின் காப்பீட்டு பாலிசிகள் விற்பனை செய்யப்படும். ஆயுள் காப்பீட்டு பாலிசி விற்பனைக்கு தேவையான பயிற்சி மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை இந்தியன் வங்கிக்கு, எஸ்பிஐ லைஃப் வழங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT