வர்த்தகம்

ஐடிபிஐ வங்கி இழப்பு ரூ.3,800 கோடியாக அதிகரிப்பு

DIN

எல்ஐசியின் ஒரு அங்கமான ஐடிபிஐ வங்கியின் இழப்பு முதல் காலாண்டில் ரூ.3,800 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,923.93 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,402.50 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிக குறைவாகும்.
அதன் காரணமாக, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,409.89 கோடியாக காணப்பட்ட இழப்பு நடப்பு நிதியாண்டில் ரூ.3,800.84 கோடியாக அதிகரித்துள்ளது. 
அதேநேரம், வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 30.78 சதவீதத்திலிருந்து குறைந்து 29.12 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 18.76 சதவீதத்திலிருந்து மிகவும் சரிந்து 8.02 சதவீதமாகவும் இருந்தது என செபியிடம் ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரியில்தான் ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி 51 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT