வர்த்தகம்

வரலாறு காணாத வீழ்ச்சியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளது.

டாலருக்கு நிகராண ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை நிலவரப்படி 71.81-ஆக நிறைவடைந்தது. மீண்டும் வெள்ளிக்கிழமை சந்தை தொடங்கியபோது மேலும் 15 பைசா சரிந்து 71.97-ஆக இருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகம் தொடங்கிய உடன் காலை 9:20 மணியளவில் 72.04-ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்றைய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.50-ஆக மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதாக வர்த்தக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT