வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: மூடிஸ்

DIN


சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ்,  நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என குறைத்து மதிப்பீடு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மூடிஸ் நிறுவனத்தின் முந்தைய மதிப்பீட்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2019-ஆம் ஆண்டில் 6.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, பல்வேறு துறைகளில் பணியமர்த்தல் நடவடிக்கையில் காணப்படும் மந்த நிலை, கிராமப்புற குடும்பங்களில் காணப்படும் இடர்பாட்டு நிலை, நிதி நிலையில் காணப்படும் நெருக்கடி தன்மை ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.2 சதவீத அளவிலான வளர்ச்சி விகிதத்தை மட்டுமே தக்கவைக்கும்.
அதேபோன்று, வரும் 2020-ஆம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி முந்தைய மதிப்பீடான 6.7 சதவீதத்திலிருந்து 0.6 சதவீதம் குறைந்து 6.1 சதவீதமாக மட்டுமே இருக்கும். 
16 ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் குறிப்பாக, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் மந்த நிலையில் உள்ளது. 2018-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய சரிவு நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மூடிஸ் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT