வர்த்தகம்

நிலக்கரி இறக்குமதியை குறைக்க நடவடிக்கை: கோல் இந்தியா 

DIN

நாட்டின் நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கும் வகையில் உற்பத்தி நடவடிக்கைகள் முடுக்கி விட்டப்பட்டுள்ளதாக கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஏ.கே.ஜா கூறியதாவது:
 அடுத்த மூன்று ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதி இடைவெளியை சுமார் 50 சதவீதம் அளவுக்கு குறைக்க நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் உள்நாட்டில் 73 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்ட அதேநேரத்தில் அதற்கான நுகர்வு 95.5 கோடி டன்னாக காணப்பட்டது. இதையடுத்து, நிலக்கரி உற்பத்தி மற்றும் அதற்கான தேவை ஆகியவற்றுக்கான இடைவெளி 23-23.5 கோடி டன் என்ற அளவில் இருந்தது.
 இந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 23.5 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 12 கோடி டன் நிலக்கரி இறக்குமதியானது தவிர்க்க முடியாதது. ஏனெனில் வாய்ப்பு குறைவாக உள்ள கடலோரப் பகுதி மின் உற்பத்தி நிலையங்கள் இந்த இறக்குமதியை மேற்கொள்ளும்.
 எனவே, எஞ்சியுள்ள இடைவெளியான 11.5-12 கோடி டன் நிலக்கரியை அடுத்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் கோல் இந்தியா ஈடு செய்யும். இதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்தில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தியை 5.3 கோடி டன் அதிகரித்து 66 கோடி டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 5-5.5 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் 50 சதவீத இறக்குமதி இடைவெளியை நிறுவனம் ஈடு செய்யும்.
 வரும் 2025-26-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை எட்ட வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT