வர்த்தகம்

மோட்டார் வாகன துறையை ஊக்குவிப்பதில் மாநில அரசின் பங்களிப்பு முக்கியம்: மாருதி சுஸுகி

DIN


மோட்டார் வாகன துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது என மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா  தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் குழு கூட்டத்தில் பங்குதாரர்களுடன் பேசிய பார்கவா இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:
மாநிலங்களைப் பொருத்தவரையில் மோட்டார் வாகன துறை அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முதலிடம் வகிக்கிறது. ஆனால், அத்துறையில் மந்த நிலை ஏற்பட்டு விற்பனை சரிந்தால் பெருமளவில் வேலை இழப்புகளும் ஏற்படுகின்றன.
மேலும், மாநிலங்களுக்கான வருவாய் ஆதாரத்தை உருவாக்குவதில் மோட்டார் வாகன துறையானது மிக முக்கிய இடத்தில் உள்ளது. மாநில அரசுகள் இந்த உண்மைகளை உணர்ந்து, மோட்டார் வாகன துறையை ஊக்குவிப்பதில் தங்களது பங்களிப்பை உரிய முறையில் அளிக்க வேண்டும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு அதிகரிக்க மோடி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தயாரிப்பு துறையை ஊக்குவிக்க மாநிலங்கள் தங்களது பங்களிப்பை உணர்ந்து செயல்படவில்லையெனில் அந்த இலக்கை எட்ட இயலாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT