வர்த்தகம்

சென்செக்ஸ் 382 புள்ளிகள் வீழ்ச்சி

DIN


சாதகமற்ற உலக நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் வீழ்ச்சியைக் கண்டது.
ஆகஸ்ட் மாதத்துக்கான பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பையொட்டி பங்குச் சந்தைகளில் நாள் முழுவதும் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது. இந்த நிலையில்,  சர்வதேச சந்தைகளில் நிலவிய மந்த நிலையும் இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்க மேலும் காரணமானது.
வங்கி மற்றும் நிதி துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிக அளவில் விற்பனை செய்தனர்.
இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் வங்கி, நிதி, எரிசக்தி, மோட்டார் வாகனம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 1.92 சதவீதம் வரை சரிந்தன.
அதேசமயம், மருந்து, உலோகம், ரியல் எஸ்டேட், மின்சாரம்,எண்ணெய்-எரிவாயு, தொலைத்தொடர்பு துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 1.50 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள யெஸ் வங்கி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, கோட்டக் வங்கி பங்குகள் 3.61 சதவீதம் வரை விலை குறைந்தன.
அதேநேரம், சன் பார்மா, வேதாந்தா, என்டிபிசி, ஓஎன்ஜிசி, ஏஷியன் பெயின்ட்ஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன பங்குகள் 5.31 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 382 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 37,068 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 97 புள்ளிகள் சரிந்து 10,948 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT