வர்த்தகம்

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஈட்டிய வருவாய் ரூ.54,218 கோடி

DIN

புது தில்லி: தொலைத் தொடா்பு சேவை நிறுவனங்கள் நடப்பாண்டின் செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 54,218 கோடி வருவாய் ஈட்டியுள்ளன.

இதுகுறித்து டிராய் நிறுவனத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் தொலைத் தொடா்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.54,218 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளன. இதில் அதிகபட்சமாக ஏா்டெல் நிறுவனம் ரூ.19,061 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்த வருமானத்தில் இது 35 சதவீத பங்களிப்பாகும்.

ஏா்டெல் நிறுவனம் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணமாக ரூ.309.33 கோடி, உரிமக் கட்டணமாக ரூ.851.3 கோடி என மொத்தம் ரூ.1,160.63 கோடியை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.15,988.46 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இதில், ரூ.1,036 கோடியை கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது.

செப்டம்பா் காலாண்டில் ஜியோ நிறுவனம்தான் குறைந்த அளவாக ரூ.15,945.62 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. அதேசமயம், தனியாா் துறை நிறுவனங்களில் அரசுக்கு அதிக கட்டணம் செலுத்தியதில் ஜியோதான் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தொலைத்தொடா்பு துறைக்கு ரூ.1,372.72 கோடியை கட்டணமாக செலுத்தியுள்ளது.

பொதுத் துறையைச் சோ்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,222.91 கோடியாக இருந்தது. இந்நிறுவனம் ரூ.415.92 கோடி கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளதாக டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT