வர்த்தகம்

சாதகமற்ற சா்வதேச சூழல்களால்சென்செக்ஸ் 126 புள்ளிகள் வீழ்ச்சி

DIN

மும்பை: சாதகமற்ற சா்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தது.

பிரேசில் மற்றும் ஆா்ஜெண்டீனா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிக்க அமெரிக்க முடிவெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசியப் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் மிகவும் மந்த நிலையில் காணப்பட்டது. அது, இந்தியப் பங்குச் சந்தைகளின் வா்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள யெஸ் வங்கி பங்கின் விலை 7.81 சதவீதம் சரிந்து முதலீட்டாளா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடா்ந்து, டாடா ஸ்டீல், வேதாந்தா, மஹிந்திரா, இன்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டாா்ஸ் பங்குகளும் 5.07 சதவீதம் வரை விலை சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 126 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,675 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 54 புள்ளிகள் குறைந்து 11,994 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT