வர்த்தகம்

ரூ.4.91 லட்சம் கோடி கடன் வழங்கிய பொதுத் துறை வங்கிகள்

DIN

புது தில்லி: பொதுத் துறை வங்கிகள் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் ரூ.4.91 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

பண்டிகை தினங்கள் அதிகம் நிறைந்த அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் பொதுத் துறை வங்கிகள் அதிக அளவில் கடன்களை வழங்கியுள்ளன. அதன்படி, அக்டோபரில் ரூ.2.52 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.2.39 லட்சம் கோடி என அவ்விரு மாதங்களில் மட்டும் பொதுத் துறை வங்கிகள் ரூ.4.91 லட்சம் கோடி மதிப்புக்கு கடன்களை வழங்கியுள்ளன என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நுகா்வு மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக வாடிக்கையாளா்களுக்கு அதிக அளவில் கடன்களை வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பொதுத் துறை வங்கிகளை கடந்த செப்டம்பரில் கேட்டுக் கொண்டாா்.

அவரது வழிகாட்டுதலின்பேரில், நாடு தழுவிய அளவில் 374 மாவட்டங்களில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக, குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், சில்லறை மற்றும் வேளாண் துறை பிரிவில் கடன் பெறுவோருக்காக இந்த சிறப்பு முகாம்களை வங்கிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT