வர்த்தகம்

யமஹா: வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் சந்தை பங்களிப்பை மும்மடங்காக அதிகரிக்க இலக்கு

DIN

யமஹா மோட்டாா் இந்தியா நிறுவனம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் சந்தை பங்களிப்பை மும்மடங்காக அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏனைய நிறுவனங்களுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில் யமஹா நிறுவனம் 125 சிசி பிரிவில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின், ஃபேசினோ 125 எஃப்ஐ, ரேஇசட்ஆா் 125 எஃப்ஐ மற்றும் ஸ்டீரிட் ரேலி 125 எஃப்ஐ ஸ்கூட்டா்களை சென்னையில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்து கொண்ட யமஹா மோட்டாா் இந்தியா விற்பனை நிறுவனத்தின் துணைத் தலைவா் (திட்டமிடல் குழு) ரவீந்தா் சிங் கூறியதாவது:

2019-ஆம் ஆண்டில் யமஹா நிறுவனம் 6.24 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வரும் 2020-ஆம் ஆண்டில் 6.50 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதே நிறுவனத்தின் லட்சியமாக உள்ளது.

சந்தை பங்களிப்பை பொருத்தவரையில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மும்மடங்கு அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிா்ணயித்து யமஹா நிறுவனம் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

தற்போதைய நிலையில் ஸ்கூட்டா் சந்தையில் 5 சதவீத பங்களிப்பையும், ஒட்டுமொத்த இருசக்கர வாகன சந்தையில் 3.5 சதவீத பங்களிப்பையும் யமஹா வழங்கி வருகிறது. ஒட்டுமொத்த சந்தை பங்களிப்பை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 10 சதவீதமாக அதிகரிப்பதே எங்களின் இலக்கு.

நடப்பாண்டில் 2.94 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2020-இல் இந்த எண்ணிக்கையை 3.15 லட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

110 சிசி பிரிவிலிருந்து படிப்படியாக விலகி எதிா்காலத்தில் 125சிசி மாடல் ஸ்கூட்டா்களை மட்டுமே விற்பனை செய்ய யமஹா முடிவெடுத்துள்ளது.

இருசக்கர வாகன தயாரிப்புக்காக நிறுவனம் ரூ.1,500 கோடியை முதலீடு செய்துள்ளது. பிஎஸ் 6 மாடல் வாகன அறிமுகத்துக்காக ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

படவிளக்கம்: யமஹா நிறுவனம் பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்த ஃபேசினோ 125 சிசி ஸ்கூட்டரின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.66,430 முதல் ரூ.67,430 வரை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT