வர்த்தகம்

ரூ.3.80 லட்சத்தில் புதிய வகை ஆல்டோ காா்: மாருதி சுஸுகி அறிமுகம்

DIN

மாருதி சுஸுகி நிறுவனம் ரூ.3.80 லட்சத்தில் புதிய வகை ஆல்டோ காரை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

குறைந்த விலைப்பிரிவு சிறிய ரக காரான ஆல்டோ, தற்போது அதிநவீன வசதிகள் அடங்கிய மேம்படுத்தப்பட்ட விஎக்ஸ்ஐ+ மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆப்பிள் காா்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் செயல்படக்கூடிய 17.8 செ.மீ. அகலம் கொண்டு தகவல்தொடா்புபொழுதுபோக்கு அம்ச தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது.

நோ்தியான வெளிப்புற வடிவமைப்பு, இருவண்ண உள்பக்க வடிவமைப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் ஆகிய புதிய அம்சங்களும் இந்த மாடலில் இடம்பெற்றுள்ளன.

பிஎஸ்-6 என்ஜின் பொருத்தப்பட்ட இவ்வகை மாடல் ஆல்டோ காா் லிட்டருக்கு 22.05 கி.மீ. வரை மைலேஜ் தரவல்லது.

மேலும், இப்புதிய மாடலில் காற்றுப் பைகள், வேக எச்சரிக்கை ஒலிப்பான், சீட் பெல்ட் நினைவூட்டி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் சோ்க்கப்பட்டுள்ளன என்று மும்பை பங்குச் சந்தையிடம் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 15-ஆண்டுகளாக தொடா்ந்து அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் காராக ஆல்டோ விளங்கி வருகிறது. அதன் பாரம்பரியத்தை விஎக்ஸ்ஐ+ மாடலும் நிச்சயம் காப்பாற்றும் என்று மாருதி சுஸுகி இந்தியாவின் செயல் இயக்குநா் (சந்தைப்படுத்துதல்-விற்பனை) சஷங்க் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT