வர்த்தகம்

கார், பைக் விற்பனை 1.87 சதவீதம் சரிவு

DIN


பண்டிகை கால விற்பனை மந்தமான நிலையில் இருந்ததையடுத்து  உள்நாட்டில் கார், பைக் விற்பனை சென்ற ஜனவரி மாதத்தில் 1.87 சதவீதம் சரிவைக் கண்டது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: சென்ற ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 2,80,185- ஆக இருந்தது. கடந்த 2018 ஜனவரி மாத விற்பனையான 2,85,467 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 1.87 சதவீதம் குறைவாகும்.
உள்நாட்டில் கார் விற்பனை 1,84,264 என்ற எண்ணிக்கையிலிருந்து 2.65 சதவீதம் சரிந்து 1,79,389-ஆனது. இருசக்கர வாகன விற்பனை 16,84,761-லிருந்து 5.18 சதவீதம் குறைந்து 15,97,572-ஆனது.மோட்டார்சைக்கிள் விற்பனை சென்ற ஜனவரியில் 10,54,757 என்ற எண்ணிக்கையிலிருந்து 2.55 சதவீதம் சரிந்து 10,27,810-ஆக காணப்பட்டது. மொத்த ஸ்கூட்டர் விற்பனை 5,53,695-லிருந்து 10.21 சதவீதம் சரிந்து 4,97,169-ஆனது.
கார், இருசக்கர வாகன விற்பனை சரிவடைந்த நிலையிலும், வர்த்தக வாகனங்கள் விற்பனை சென்ற ஜனவரியில் சூடுபிடித்து 2.21 சதவீதம் அதிகரித்து 87,591-ஆக காணப்பட்டது. 
சென்ற ஜனவரியில் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய மோட்டார் வாகன விற்பனை  21,18,465 என்ற எண்ணிக்கையிலிருந்து  4.68 சதவீதம் சரிந்து 20,19,331-ஆக இருந்தது என அந்த சங்கத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாம் அமைப்பின் துணை தலைமை இயக்குநர் சுகாதோ சென் கூறுகையில், பண்டிகை காலத்தில் வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளதால் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற ஜனவரியில் மொத்த விற்பனையை விட சில்லறை  விற்பனை சிறப்பாக  காணப்பட்டது. நடப்பு நிதியாண்டு முடிவடைய எஞ்சியுள்ள இருமாதங்களில் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT