வர்த்தகம்

டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை 12 சதவீதம் சரிவு

DIN


டாடா மோட்டார்ஸ் சர்வதேச வாகன விற்பனை சென்ற ஜனவரியில் 12 சதவீத சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஜாகுவர் லேண்ட்ரோவர் உள்ளிட்ட டாடா மோட்டார்ஸின் சர்வதேச வாகன விற்பனை சென்ற ஜனவரி மாதத்தில் 1,00,572-ஆக இருந்தது. கடந்த 2018 நிதியாண்டின் விற்பனையான 1,14,797 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் குறைவாகும்.
டாடா மோட்டார்ஸின் அனைத்து ரக வர்த்தக வானங்கள் மற்றும் டாடா டேவூ ரக சர்வதேச மொத்த விற்பனை நடப்பாண்டு ஜனவரியில் 40,886-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதேகால அளவில் விற்பனையான 44,828 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் குறைவாகும்.
நிறுவனத்தின் அனைத்து வகை பயணிகள் வாகனங்களின் சர்வதேச விற்பனை அம்மாதத்தில் 69,969 என்ற எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதம் குறைந்து 59,686-ஆக காணப்பட்டது.
உலகளவில் ஜாகுவர் லேண்ட்ரோவர் விற்பனை கடந்த ஜனவரியில் 41,676-ஆக இருந்தது. இதில், ஜாகுவர் விற்பனை 12,904-ஆகவும், லேண்ட் ரோவர் விற்பனை 28,772-ஆகவும் இருந்தது என டாடா மோட்டார்ஸ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT