வர்த்தகம்

ரூ.2,951 கோடி இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியது என்டிபிசி

DIN


நடப்பு நிதியாண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.2,951.88 கோடியை நாட்டின் மிகப்பெரிய மின்உற்பத்தியாளராக திகழும் என்டிபிசி நிறுவனம் வெள்ளிக்கிழமை வழங்கியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிதியாண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.2,951.88 கோடியை என்டிபிசி வழங்கியுள்ளது. இது நிறுவனத்தின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 35.8 சதவீதமாகும்.
என்டிபிசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 58.93 சதவீதமாக உள்ளது. இதையடுத்து, இதற்கான இடைக்கால ஈவுத்தொகை பங்களிப்பாக மத்திய அரசு ரூ.1,739.61 கோடியைப் பெற்றுள்ளது. இந்த தொகையை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் என்டிபிசி தலைவரும், நிர்வாக இயக்குநருமா குர்தீப் சிங் வழங்கினார். 
நிறுவனம் 26-ஆவது ஆண்டாக தொடர்ந்து வழங்கும் ஈவுத்தொகையாகும் இது  என்று என்டிபிசி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT