வர்த்தகம்

கர்நாடகா வங்கி லாபம் 60% அதிகரிப்பு

DIN


தனியார் துறையைச் சேர்ந்த கர்நாடகா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 60.7 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி ரூ.140.41 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.87.38 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 60.7 சதவீதம் அதிகம்.
நிகர வட்டி வருமானம் ரூ.451.48 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.487.95 கோடியாக காணப்பட்டது. 
மொத்த வாராக் கடன் விகிதம் 3.96 சதவீதத்திலிருந்து அதிகரித்து 4.45 சதவீதமாக இருந்தது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 2.85 சதவீதத்திலிருந்து உயர்ந்து 3 சதவீதமானது என கர்நாடகா வங்கி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT