வர்த்தகம்

ஃபெடரல் வங்கி லாபம் 28% அதிகரிப்பு

DIN


தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் லாபம் மூன்றாவது காலாண்டில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்த அந்த வங்கி செபி-க்கு வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஃபெடரல் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,299.96 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.2,729.83 கோடியாக மட்டுமே காணப்பட்டது. 
நிகர லாபம் ரூ.260 கோடியிலிருந்து 28 சதவீதம் அதிகரித்து ரூ.333.63 கோடியானது. 
மொத்த வாராக் கடன் விகிதம் 2.52 சதவீதத்திலிருந்து அதிகரித்து 3.14 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.36 சதவீதத்திலிருந்து உயர்ந்து 1.72 சதவீதமாகவும் இருந்தது என ஃபெடரல் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT