வர்த்தகம்

ரூ.97 கோடி மதிப்புக்கு ஜெர்மன் பிராண்டை வாங்கியது இமாமி

DIN

இந்தியாவைச் சேர்ந்த இமாமி நிறுவனம் ஜெர்மனியின் மிகவும் புகழ்பெற்ற கிரீமி 21 என்ற பிராண்டை 12 மில்லியன் யூரோ (ரூ.97 கோடி) மதிப்புக்கு கையகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இமாமி நிறுவனத்தின் இயக்குநர் ஹர்ஷா வி. அகர்வால் கூறியதாவது:
இவ்வளவு பெரிய தொகையில் சர்வதேச கையகப்படுத்தல் நடவடிக்கையொன்றை  இமாமி மேற்கொள்வது இதுவே முதல் முறை. இதற்கு, முன்பாக, சிறிய நிறுவனத்தை ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ளோம்.
ஜெர்மனியின் கிரீமி 21 பிராண்ட் 11-12 மில்லியன் யூரோ மதிப்புக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இமாமி நிறுவனத்தின் சர்வதேச நிறுவனத்தின் வருவாய் கூடுதலாக 15 சதவீதம் அளவுக்கு உயரும்.
தனிநபர் பராமரிப்பு பொருள்கள் பிரிவில் நிறுவனத்தின் வர்த்தகம் சர்வதேச சந்தையில் இன்னும் பரவலாக அதிகரிக்க இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை பேருதவியாக இருக்கும். இந்தியாவில் மட்டும் இப்பிரிவிலான வர்த்தகம் 70 சதவீதம் அளவுக்கு உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT