வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் சரிவு

DIN

தொடர்ந்து மூன்று நாள்களாக ஏற்றம் கண்டு வந்த இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இறக்கத்தைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 318.18 புள்ளிகள் சரிந்து 38,897.46 புள்ளிகளில் நிலைத்தது. இது 0.81 சதவீத சரிவாகும். தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 90.60 புள்ளிகள் சரிந்து 11,596.90 புள்ளிகளில் நிலைப் பெற்றது. இது 0.78 சதவீத சரிவாகும்.
மும்பை பங்குச் சந்தையில் யெஸ் வங்கி அதிகபட்சமாக 12.85 சதவீத சரிவைச் சந்தித்தது. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் அந்த வங்கியின் நிகர லாபம் 92.44 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதனால், பெரும்பாலானவர்கள் யெஸ் வங்கி பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால், அந்தப் பங்கின் விலை வேகமாக இறங்கியது. சர்வதேச பங்குச் சந்தையில் ஏற்பட்ட சுணக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையும் பங்குச் சந்தைகளை வெகுவாக பாதித்தது.
இது தவிர ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து அறிவித்தது. இதற்கு முன்பு நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் இருக்கும் என்று அந்த வங்கி கூறியிருந்தது. இப்போது அதனை 7 சதவீதமாக அறிவித்துவிட்டது.
ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், மாருதி, வேதாந்தா, பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக் ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு 4.24 சதவீதம் வரை குறைந்தன. ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை வியாழக்கிழமை 2.26 சதவீதம் உயர்ந்து முதலிடம் பிடித்தது. கோட்டக் வங்கி, ஐடிசி ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பும் உயர்ந்தன.
எஃப்எம்சிஜி துறையில் கோல்கேட்-பாமோலிவ் இந்தியா நிறுவனம் தனது காலாண்டு முடிவை வெளியிட்டது. அதில் நிகர லாபம் 10.76 சதவீதம் குறைந்து, ரூ.169.11 கோடியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் முதலாம் காலாண்டு லாபம் 41.4 சதவீதம் குறைந்துள்ளது. விப்ரோவின் லாபம் 12.5 சதவீதம் குறைந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT