வர்த்தகம்

சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு ஊக்கமளிப்பதில் உருக்கு துறையின் பங்கு மகத்தானது

DIN

நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்கு ஊக்கமளிப்பதில் உருக்கு துறையின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது என்று மத்திய உருக்குத் துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே (படம்) தெரிவித்தார்.
செயில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
நீடித்த சமூக-பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதில் உருக்குத் துறை பங்கு மகத்தானதாக உள்ளது. இருப்பினும், உருக்கு மற்றும் இரும்புப் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு போக்குவரத்து வசதியானது பெரிய சவாலாகவே உள்ளது.
ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் இந்த சவாலில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளன. அங்கு போக்குவரத்து வசதிகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அவர்களுக்கு பொருத்தமான மற்றும் சிறப்பான தயாரிப்புகளை உருக்கு துறை நிறுவனங்கள் வழங்க வேண்டும். அனைத்து தொழில்களுக்கும் உருக்குத் துறை தான் ஆதாரமாக திகழ்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT