வர்த்தகம்

இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீத வளர்ச்சி காணும்

DIN


நடப்பு 2019-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீத வளர்ச்சி காணும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச தயாரிப்புத் துறையின் வர்த்தக வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை இதர முக்கிய ஆசிய பொருளாதார நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக, நடப்பு 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 7.3 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், கடந்த 2017-18 நிதியாண்டில் 7.2 சதவீதமாக காணப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-19 நிதியாண்டில் அதை விட குறைவாக 7 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,  குறுகிய கால அளவில் நுகர்வு நடவடிக்கை மூலமாக வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். மேலும், தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதால் செலவின நடவடிக்கைகள் சூடுபிடித்து குறுகிய கால அளவில் நன்மை ஏற்பட வழிவகுக்கும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT