வர்த்தகம்

நாடு முழுவதும்  ஜனவரியில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

DIN

நாடு முழுவதும் ஜனவரி மாதம் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஜனவரி மாதம் தேயிலை உற்பத்தி 13.96 மில்லியன் கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே மாதம் நாடு முழுவதும் 17.68 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி இருந்தது. இந்தத் தகவலை தேயிலை வாரியம் அண்மையில் வெளியிட்டது.
அந்த வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் தேயிலை பறிக்க தடை நிலவுவதன் காரணமாக உற்பத்தியே இல்லை.
தென் மாநிலங்களில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 13.96 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது.
இதில் தமிழகத்தில் மட்டும் 9.25 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. 
அதற்கு அடுத்த இடத்தில் கேரளம் (4.45 மில்லியன் கிலோ) உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் தேயிலை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT